உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மழையில் நனைந்தபடி விவசாயிகள்  உண்ணாவிரதப் போராட்டம்

 மழையில் நனைந்தபடி விவசாயிகள்  உண்ணாவிரதப் போராட்டம்

ராமநாதபுரம்: மழை நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே கொட்டிய மழையில் நனைந்தபடி நெல், மிளகாய்க்குரிய நிவாரணத்தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு சங்கத்தின் நிறுவன தலைவர் பாக்கியநாதன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அறுவடை தயாராக இருந்த நெல், மிளகாய் பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதமடைந்தது. ஓராண்டாகியும் வெள்ள நிவாரணம் வழங்கவில்லை. மிளகாய்க்கு காப்பீடு தொகையும் வரவில்லை. உடனடியாக நிவாரணம், காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இயற்கை பேரிடர் பாதித்த விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்ய வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மழையில் குடை பிடித்தும், நனைந்தபடியும் கோஷமிட்டனர். அவர்களுடன் வேளாண் தோட்டக்கலை துணை இயக்குநர் ஆறுமுகம், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு சங்க நிர்வாகிகள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து பேசினர். அப்போது விரைவில் நிவாரணத்தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை