உழவாரப்பணி
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயில் மற்றும் பிரகார பகுதிகளில் உழவாரப் பணிகள் நடந்தது. நாமக்கல் மாவட்டம் திருச்சிற்றம்பலம் சிவனடியார்கள் உழவார திருப்பணி குழுவின் சார்பில் ஏராளமான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கோயில்களில் துாய்மைப் பணியை மேற்கொண்டனர். மாணிக்கவாசகரின் சன்னதியில் திருவாசகம் பாடினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.