உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் கன மழையால் நிரம்பிய வயல்கள் வெள்ளக்காடானது! குடியிருப்பு பகுதியில் ஆறாக ஓடிய பாதாள சாக்கடை

ராமநாதபுரத்தில் கன மழையால் நிரம்பிய வயல்கள் வெள்ளக்காடானது! குடியிருப்பு பகுதியில் ஆறாக ஓடிய பாதாள சாக்கடை

வடகிழக்கு பருவமழை முன்னதாக மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மாவட்டத்தில் தொடர்ந்து நேற்று மதியம் வரைமழை பெய்தது. நேற்று முன்தினம் (அக்.,20) காலை 6:00மணி முதல் நேற்று (அக்.,21) காலை 6:00 மணி வரை மாவட்டத்தில் 628.80 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் நகர், சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சியில் மழை நீர் வடிகால்கள் பராமரிக்கப்படாமல் உள்ளதால் மழை நீர் செல்ல வழியில்லாமல் குளம் போல ரோடுகள், தாழ்வான பகுதிகளில் தேங்கியது. ஓம்சக்தி நகர், பாரதிநகர், கிருஷ்ணா நகர், மதுரை, ராமேஸ்வரம் ரோட்டில் தண்ணீர் குளம்போல தேங்கியதால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்ட னர். மழைநீரை ஊருணிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் வரத்து கால்வாய்களை சீரமைக்க நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை