மேலும் செய்திகள்
தீ விபத்து தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு
13-Oct-2025
திருவாடானை: திருவாடானை தீயணைப்புதுறை சார்பில் பொது மக்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'வாருங்கள் கற்றுகொள்ளுங்கள்' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று பாரதிநகர் குட்லக் மருத்துவமனை முன்பு நிலைய அலுவலர் முருகானந்தம் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தீயணைப்பு கருவிகளை பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். பொதுமக்கள் ஆபத்தான நேரங்களில் தங்களை எப்படி தற்காத்து தப்பித்து கொள்ள வேண்டும், தீயணைப்பு கருவிகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
13-Oct-2025