உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிணற்றில் விழுந்த மானை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கிணற்றில் விழுந்த மானை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

கமுதி: கமுதி அருகே பேரையூரில் கிணற்றில் விழுந்த மானை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். கமுதி பகுதியில் குண்டாறு, கிருதுமால் நதி, மலட்டாறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய் பகுதியில் ஏராளமான அரிய வகை புள்ளிமான்கள் வசிக்கின்றன. கண்மாய் பகுதிகளில் தண்ணீர் வறண்டு இருப்பதால் இரை மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதியில் மான்கள் உலா வருகின்றன. இந்நிலையில் கமுதி அருகே பேரையூர் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மான் தவறி விழுந்தது. இதனைப் பார்த்த விவசாயிகள் முதுகுளத்துார் தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சங்கர் தலைமையில் வீரர்கள் கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்டனர். பின்பு சாயல்குடி வனத் துறையினரிடம் மான் ஒப்படைக்கப்பட்டு காட்டில் விடப்பட்டது. இதையடுத்து தண்ணீர், இரை தேடி குடியிருப்பு மற்றும் ரோடு பகுதியில் உலாவரும் மான்கள் உயிரிழந்து வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் உயிரினங் களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ