உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 1330 குறள்களை கூறிய மாணவனுக்கு முதல் பரிசு

1330 குறள்களை கூறிய மாணவனுக்கு முதல் பரிசு

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடந்த திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் 1330 குறள்களை கூறிய பரமக்குடி அப்துல் கலாம் பள்ளி மாணவன் முதல் பரிசு பெற்றான். பரமக்குடி புது நகரில் டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளி செயல்படுகிறது. இங்கு படிக்கும் 6ம் வகுப்பு மாணவன் சாய் புகழ் இனியன் மாவட்ட அளவில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்றார். இதன்படி கன்னியாகுமரி கடல் நடுவில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் தமிழக அரசு இப்போட்டியை நடத்தியது. தொடர்ந்து மாணவன் 1330 திருக்குறள்களையும் உற்சாகமாக தெளிவாக கூறிய நிலையில் முதல் பரிசு பெற்றார். மாணவனை பள்ளி தாளாளர் முகைதீன் முசாபர் அலி, நிர்வாக இயக்குனர் முகமது சீனி பாதுஷா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை