| ADDED : பிப் 01, 2024 07:09 AM
திருப்புல்லாணி : -திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு, சண்முகவேல் பட்டினம், சேதுக்கரை, காஞ்சிரங்குடி உள்ளிட்ட மன்னார் வளைகுடா பகுதிகளில் கடந்த 10 நாட்களாக மீன்வரத்து குறைவாக உள்ளதால் திருப்புல்லாணி மீன் மார்க்கெட் வியாபாரிகள் பாம்பன், ராமேஸ்வரம், முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்களை விலைக்கு வாங்கி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்புல்லாணி மீன் வியாபாரி யாக்கூப் கூறியதாவது:தற்போது களிமண்குண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் எதிர்பார்த்த மீன்வரத்து கிடைக்காததால் பாம்பன், வாலிநோக்கம், முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்களை வாங்கி வருகிறோம்.முன்பு சூடை கிலோ ரூ.100 விற்றது தற்போது ரூ.200க்கும், ஓரா ரூ.250க்கும், பெரிய நண்டு ரூ.600, முரல் ரூ.400, பாறை மீன் ரூ.600, கிழங்கான் ரூ.500, கணவாய் ரூ.650, இறால் ரூ. 500 என கணிசமாக கிலோவுக்கு ரூ. 100 முதல் ரூ.150 வரை விலை உயர்ந்துள்ளது. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் மீன் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.