உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன்வள டிஜிட்டல் தள பதிவு முகாம்

மீன்வள டிஜிட்டல் தள பதிவு முகாம்

தேவிபட்டினம்: மத்திய அரசின் நலத்திட்டங்களை மீனவர்கள் நேரடியாக பெறும் வகையில் தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் மீனவர்கள் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்ய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மண்டபம் யூனியன் இருமேனியில் நடைபெற்ற தேசிய மீனவர் டிஜிட்டல் தள பதிவு முகாமிற்கு மீன்வளத்துறை துணை இயக்குனர் பிரபாவதி தலைமை வகித்தார்.உதவி இயக்குநர் சிவக்குமார், மாவட்ட பொது சேவை மைய மேலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.முகாமில் மீனவர்களுக்கு டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்திருந்தால் மட்டுமே மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் மீனவர்கள் பெற முடியும். வங்கி கடன்களையும் அதன் மூலம் பெற முடியும். இதனால் மாவட்டம் முழுவதும் மீனவர் பகுதிகளில் தொடர்ந்து முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், முகாமை மீனவர்கள் பயன்படுத்தி தேசிய மீன்வள டிஜிட்டல் களத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் தெரிவித்தனர்.முகாமில் இளநிலை மீன்வள விஞ்ஞானி தருமர், மத்திய அரசின் மீன்வளம் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவன பயிற்சியாளர் பிரவின் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மண்டபம் பகுதியிலும் முகாம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி