ஜெலட்டின் பறிமுதல் வழக்கில் மீனவர் கைது
தொண்டி:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடலில் வெடி வைத்து மீன்பிடிப்பதற்காக மீனவர்களுக்கு ஜெலட்டின் சப்ளை செய்த மீனவர் கைது செய்யப்பட்டார்.புதுக்கோட்டை மாவட்ட மலைப்பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதிக்கு ஜெலட்டின் வெடி பொருட்கள் கடத்தி வரப்படுவது வழக்கமாக உள்ளது.ஆக.,28 இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து டூவீலரில் இரண்டு பேர் ஒரு சாக்கு மூடையில் ஜெலட்டின், டெட்டனேட்டர் மற்றும் ஒயரை கடத்தி ஓரியூரை நோக்கி சென்றனர்.வேகத்தடையில் டூவீலர் ஏறி இறங்கிய போது மூடை தவறி விழுந்து ஜெலட்டின் குச்சிகள் ரோட்டில் சிதறின.அந்தப்பக்கமாக ரோந்து சென்ற போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். எஸ்.பி.பட்டினம் போலீசார் 400 ஜெலட்டின், 400 டெட்டனேட்டர், 2 கிலோ ஒயரை கைப்பற்றினர்.இந்த வழக்கில் ஏற்கனவே தொண்டி புதுக்குடியை சேர்ந்த செந்தில்குமார் 35, மீனவர்களுக்கு ஜெலட்டின் சப்ளை செய்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சோனையநாதன் 28, கருணாநிதி 42, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று தொண்டி புதுக்குடி மீனவர் குமரன் 38, என்பவரை இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் கைது செய்தார்.