உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பஸ் மோதி மீனவர் பலி

அரசு பஸ் மோதி மீனவர் பலி

சாயல்குடி; சாயல்குடி அருகே மேலமுந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் மாரி செல்வம் 28. நேற்று முன் தினம் இரவு 8:00 மணிக்கு சாயல்குடி சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு மீண்டும் மேலமுந்தல் செல்வதற்காக டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது ராமநாத புரத்தில் இருந்து சாயல்குடி அருகே பூப்பாண்டிய புரம் கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாத புரத்தில் இருந்து திருச்செந்துார் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் நேராக மோதிய விபத்தில் மாரி செல்வம் காயம் அடைந்தார். அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று வயதில் மகனும், ஒரு வயதில் மகனும் உள்ளனர். அரசு பஸ் டிரைவர் பாம்பூரைச் சேர்ந்த ரவியை சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ