உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மீனவர் கொலை ஒருவருக்கு வலை

 மீனவர் கொலை ஒருவருக்கு வலை

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை படையாச்சி தெருவைச் சேர்ந்த மீனவர்கள் நாகூர்செல்வம் 32, அடையாளவேல் 23, இடையே கடற்கரையில் படகு நிறுத்துவது பிரச்னை உள்ளது. பிப்.,5ல் நடந்த தகராறில் அடையாளவேல் வலை அறுக்கும் கத்தியால் நாகூர்செல்வத்தை குத்திக்கொலை செய்தார். ​தொண்டி இன்ஸ்பெக்டர் கனகராஜ், போலீசார் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த அடையாளவேலுவை கைது செய்தனர். இச்சம்பவத்தில் அடையாளவேலுக்கு அண்ணன் ராக்கப்பன் உடந்தையாக இருந்துள்ளார். கொலைக்குப் பின் இருவரும் தப்பியோடியதை சிலர் பார்த்துள்ளனர். எனவே ராக்கப்பன் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை