உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்கள் 23 பேருக்கு 25 வரை சிறை

மீனவர்கள் 23 பேருக்கு 25 வரை சிறை

ராமேஸ்வரம்: கடந்த 9ல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற கீதன், சகாயராஜ், ராஜா ஆகியோரது விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை வீரர்கள், மூன்று படகுகளில் இருந்த 23 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.பின், அந்த மீனவர்கள் மீது யாழ்ப்பாணம் மீன்துறை அதிகாரிகள் வழக்குப் பதிந்து, ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை, நவ., 25 வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
நவ 12, 2024 18:51

ராமேஸ்வரம்/ தலைமன்னார் ...இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 15கிமீ . உலக நியதிப்படி எந்த நாட்டு கரையிலிருந்து 5கிமீ வரை அவர்களது நாடு. இந்த விபரங்கள் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அத்துப்படி. பின்னர் இந்திய மீனவர்கள் ஏன் இலங்கை நாட்டின் தண்ணீரில் சென்று மீன் பிடிக்கிறார்கள். ஏனென்றால் இந்திய தம்மிலாக மீனவர்கள் இரட்டைமடி வலை வீசி மீன் குஞ்சுகளை உடை விடாமல் வழித்து எடுக்கிறார்கள் . இந்திய கடலில் மீன் வளம் இல்லை. ஆனால் இலங்கை யில் உள்ள இலங்கை தமிழர்கள் மிக குறைவாகவே மீன் இடித்து மீன் வளங்களை விட்டுவைத்துள்ளனர். அந்த மீன்களை இந்திய தமிழ் பேசும் மீனவர்கள் சென்று திருட்டு தனமாக வலை வீசி பிடிக்க்கிறார்கள். நல்லவேளை இந்திய மீ னவர்கள் எவரும் சுடப்படவில்லை . மன்னாரில் கோர்ட்டில் இலங்கை நீதிபதியின் கருத்தை கேட்டுவிட்டு பின்னர் முடுவு செய்யுங்கள். யார் குற்றவாளி ???????????


புதிய வீடியோ