மேலும் செய்திகள்
பூஜை நடத்தி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
17-Jun-2025
திருவாடானை: வெளிநாடுகளில் மீன்பிடி தடைகாலம் முடிந்ததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வெளி நாடுகளுக்கு செல்லத் துவங்கியுள்ளனர்.வெளிநாடுகளில் மீன்பிடி தடைகாலம், மீன்களின் இனப்பெருக்க காலம், மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது. தொண்டி அருகே நம்புதாளை, முள்ளிமுனை, காரங்காடு, புதுபட்டினம் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பக்ரைன், துபாய், சவூதி போன்ற பல வெளி நாடுகளில் தங்கியிருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.வழக்கம் போல் மீன்பிடி தடைகாலம் அறிவிக்கப்படும் போது மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு தடைகாலம் முடிந்தவுடன் மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். அதே போல் ஏப்.,1ல் தடைகாலம் அறிவிக்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்பினர். இங்கு வந்த மீனவர்கள் மற்ற நாட்டுப்படகு மீனவர்களுக்கு உதவியாக கடலுக்கு சென்று மீன்பிடித்தார்கள். வெளிநாடுகளில் மீன்பிடி தடைகாலம் முடிந்ததால் ஜூன், ஜூலையில் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு செல்வார்கள்.இது குறித்து முள்ளிமுனை மீனவர்கள் கூறுகையில், வெளிநாடுகளில் மீன்பிடி தடைகாலம் முடிந்ததால் ஏராளமான மீனவர்கள் முதல் கட்டமாக புறப்பட்டு சென்றுள்ளனர். மீதமுள்ள மீனவர்கள் ஜூலை முதல் வாரத்திற்குள் சென்று விடுவோம் என்றனர்.
17-Jun-2025