மீனவர்கள் இன்று இரவு கரை திரும்ப உத்தரவு
தொண்டி: விசைப்படகு மீனவர்களுக்கு தடைகாலம் அறிவிக்கபட்டதால் இன்று (ஏப்.14) இரவு 12:00 மணிக்குள் கட்டாயம் திரும்ப உத்தரவிடபட்டுள்ளது.தொண்டி, லாஞ்சியடி, சோலியக்குடி, திருப்பாலைக்குடியில் 77 விசைபடகு மீனவர்கள் உள்ளனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் (வடக்கு) ராமநாதபுரம் ஜெயக்குமார் உத்தரவில் கூறியிருப்பதாவது- மீன் இனபெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தை பாதுகாத்திடும் பொருட்டும் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தபட்டு வருகிறது. இந்தாண்டு இன்று (ஏப்.15) முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் தடைகாலம் அமலில் இருக்கும். எனவே கடலுக்கு சென்ற தொண்டி, லாஞ்சியடி, சோலியக்குடி மற்றும் திருப்பாலைக்குடி விசைபடகு மீனவர்கள் இன்று (ஏப்.14) இரவு 12:00 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து 77 மீனவர்களும் கரைக்கு திரும்ப துவங்கியுள்ளனர்.