5 நாட்களுக்கு பின் கடலுக்கு சென்ற மீனவர்கள்
ராமேஸ்வரம் : மார்ச் 14, 15ல் கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா நடந்தது. விழாவுக்கு செல்லும் படகுகள் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டிய நிலையிலும் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மார்ச் 12 முதல் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.இந்நிலையில் கச்சத்தீவு திருவிழா தடை நீங்கி 5 நாட்களுக்குப் பிறகு செல்வதால் அதிக மீன்கள் சிக்கும் என்ற ஆவலுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று 480 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.