உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன்வரத்து குறைவால் மீனவர்கள் கவலை

மீன்வரத்து குறைவால் மீனவர்கள் கவலை

தொண்டி: தொண்டி கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு போதிய மீன்கள் கிடைக்காததால் மீனவர்கள் கவலையடைந்தனர். தொண்டி பகுதியில் மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. இப்பகுதியை சேர்ந்த மூவராயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்கின்றனர். இந்நிலையில் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்த்த மீன்கள் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து விசைப்படகு மீனவர்கள் கூறியதாவது: சீதோஷ்ண நிலை மாற்றத்தால் போதிய மீன்கள் கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. வலையை விரித்து பல மணி நேரம் காத்திருந்த போதும் போதுமான மீன்கள் கிடைக்கவில்லை. படகுக்கு ரூ.16 ஆயிரம் வரை டீசல் செலவு செய்கிறோம். ஆனால் ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான மதிப்புள்ள மீன்களே கிடைக்கிறது. சம்பளம் உள்ளிட்ட செலவு போக கணக்கு பார்த்தால் நஷ்டம் ஏற்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை