உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர் ஸ்டிரைக் வாபஸ்

மீனவர் ஸ்டிரைக் வாபஸ்

ராமேஸ்வரம்:12 நாட்களுக்குப் பின் ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்று இன்று (ஆக.,23) மீன்பிடிக்கச் செல்கின்றனர். இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆக.,11 முதல் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர். இதனை வலியுறுத்தி ஆக.,19ல் தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் செய்தனர். அப்போது மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து முறையிட நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி.,சந்தீஷ், டி.ஆர்.ஓ., கோவிந்தராஜலு உறுதி அளித்தனர். இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று 12 நாட்களுக்குப் பின் இன்று மீன்பிடிக்க செல்கின்றனர். அதிக மீன்வரத்து கிடைக்கும் என ஆவலுடன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி