உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன்பிடி வலைகள் தீயில் எரிந்தது 

மீன்பிடி வலைகள் தீயில் எரிந்தது 

தொண்டி: தொண்டி கடற்கரையில் கொளுஞ்சி செடிகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பழைய மீன்பிடி வலைகள் சேதமடைந்தது. தொண்டி மகாசக்திபுரத்தை சேர்ந்த செல்வம், பிரகாஷ் ஆகியோருக்கு சொந்தமான வலைகள் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்தன. அதிகாலையில் அந்த பக்கமாக சென்ற மீனவர்கள் வலைகள் தீயில் கருகி இருந்ததை பார்த்தனர். அருகிலிருந்த ஒரு பிளக்ஸ் போர்டும் எரிந்து சேதமடைந்திருந்தது. இது குறித்து போலீசார் கூறுகையில், கடற்கரையில் கொளுஞ்சி செடிகளுக்கு யாரோ தீ வைத்துள்ளனர். அப்போது மீனவர்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்த பழைய வலைகள் மீது தீ பரவியுள்ளது. மீனவர்களிடமிருந்து புகார் வரவில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை