மேலும் செய்திகள்
தொண்டியில் பலத்த காற்று; மீன் பிடிப்பதற்கு தடை
17-Jun-2025
தொண்டி: தொண்டியில் வெடி வைத்து மீன்பிடிக்கப்பட்டதாக கிடைத்த தகவலை தொடர்ந்து மரைன் போலீசார் சோதனை செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் (வடக்கு) ஆற்றங்கரை முதல் தேவிபட்டினம், தொண்டி வரை 77 விசைப்படகுகள், 3200 நாட்டுப்படகுகள் உள்ளன. கடலில் பலத்த காற்று வீசுவதால் அனைத்து மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தொண்டியில் தடையை மீறி சில மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அதில் வெடி வைத்து மீன்பிடிக்கப்பட்டு வருவதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொண்டி மீன்வளத்துறையினர் மரைன் போலீசார் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் சென்று படகுகளை ஆய்வு செய்ததில் 150 கிலோ எடையுள்ள மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த மீன்கள் வெடி வைத்து பிடிக்கப்பட்டதா என உணவு கட்டுப்பாடு அலுவலர்கள் ஆய்வு செய்தனர். தடையை மீறி மூன்று படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
17-Jun-2025