மீன் வியாபாரி பலி
திருவாடானை: திருவாடானை அருகே ஓரிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மீன் வியாபாரி பால்ராஜ் 64. நவ.22 ல் சின்னக்கீரமங்கலம் வாரச்சந்தைக்கு சென்று மீன் வியாபாரம் செய்து விட்டு இரவு 8:30 மணிக்கு ரேஷன் கடை அருகே நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் பால்ராஜ் இறந்தார். பால்ராஜ் மனைவி பானுமதி புகாரில் திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.