மேலும் செய்திகள்
பக்தர்கள் பால்குட ஊர்வலம்
29-Jul-2025
முதுகுளத்துார்; முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கணபதி ஹோமம், சிறப்பு யாகசாலை பூஜை, பூர்ணாஹுதி நடந்தது. செல்லியம்மனுக்கு கங்கையிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர், பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 பொருட் களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் ஊர்காப்பு கட்டப்பட்டது. கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பால்குடம், அக்னிசட்டி, பூக்குழி, வேல் குத்தும் பக்தர்களுக்கு காப்பு கட்ட பட்டது. இன்று 2008 விளக்கு பூஜை, ஆக.,4ல் வளையல் அலங்காரம், ஆக.,6ல் அக்னிசட்டி ஊர்வலம், ஆக.7ல் பால்குடம் ஊர்வலம், சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா, ஆக.,8ல் வேல் குத்தி பூக்குழி, இறங்குதல், பூப்பல்லாக்கில் அம்மன் வீதி உலா, ஆக.,9ல் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கங்கையில் கரைத்தல் நடைபெற உள்ளது. விழாவில் முதுகுளத்துார், துாரி,செல்வநாயக புரம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
29-Jul-2025