மேலும் செய்திகள்
ஆடி பொங்கல் முளைப்பாரி விழா
07-Aug-2025
முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயில் 49ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பக்தி பஜனை பாடல்கள் நடைபெற்றது. காப்பு கட்டிய பக்தர்கள் முருகன் கோயிலில் இருந்து பஸ் ஸ்டாண்ட், பத்திரகாளியம்மன், அய்யனார் கோயில், வடக்கூர் உட்பட கிராமத்தின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து வேல் குத்தியும், அக்கினி சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். காப்பு கட்டிய பக்தர்கள் பொங்கல் வைத்தனர். மாலை பூத்தட்டு நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகையான அபிஷேகம் தீபாராதனை நடந்தது. விழாவில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலர் கலந்து கொண்டனர். கவினா கல்வி குழுமத்தின் தலைவர் கண்ணதாசன் பாண்டியன், தாளாளர் ஹேமலதா, செல்வா ஹோட்டல் உரிமையாளர் பூமிநாதன் பங்கேற்றனர்.
07-Aug-2025