உள்ளூர் செய்திகள்

பக்தர்களுக்கு உணவு

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் பகுதியில் இருந்து வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்களுக்கு ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பா.ஜ., சார்பில் ஒன்றிய தலைவர் வடிவேல் தலைமையில் பிஸ்கட், குளிர்பானங்கள் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ரோட்டின் ஓரமாக பாதுகாப்பாகவும், விழிப்புணர்வுடனும் செல்லுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் சிரஞ்சீவி, ஒன்றிய துணைத் தலைவர் திருமலை நம்பிராஜன், ஒன்றிய பொதுச் செயலாளர் செல்லத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை