ராமநாதபுரத்தில் நான்கு குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்கான 1098 அழைப்பில் வந்த புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் நான்கு குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தினர். பரமக்குடியில் தியேட்டர் பகுதியில் 9 ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி, கமுதி அருகே பெருங்கருணை தங்கவேலு மகன் சுந்தரபாண்டி 34. இவர்கள் இருவருக்கும்முருகன் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. இதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பனைக்குளம் சோகையன்தோப்பு பிளஸ் 2 முடித்த 17 வயது மாணவிக்கும் கடலாடி அருகே என். வெள்ளப்பட்டி மாடசாமி மகன் ஆற்றாங்கரை 28, என்பவருக்கும் சுந்தர பெருமாள் கோயிலில் திருமணம் நடக்க இருந்ததை அதிகாரிகள் நிறுத்தினர். இதேபோல் தொண்டி அருகே புதுக்குடியில் 17 வயது மாணவிக்கும் அதே பகுதி மணி மகன் விஜய் 28, திருமணம், பார்த்திபனுார் 17 வயது நர்சிங் மாணவிக்கும் மானாமதுரை ஐயங்காளை மகன் மாரிமுத்து 32, திருமணத்தையும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், குழந்தைகள்பாதுகாப்பு ஒருங்கிணைப்புக்குழு ஆனந்தராஜ் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.