இலவச சைக்கிள் வழங்கல்
ராமநாதபுரம்: தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தலைமையாசிரியர் டேவிட் மோசஸ் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். 62 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக தினைக்குளம் ஜமாத் செயலாளர் பாக்கர் ஜமால், பள்ளிப் புரவலர் முகமது ரபீக், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஜகர்நிஸா பானு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவி பாசிதா பங்கேற்றனர். நிகழ்ச்சியை ஆசிரியர் முருகவேல் ஒருங்கிணைத்தார்.