மேலும் செய்திகள்
தீயணைப்பு வீரர்களுக்கு கமாண்டோ பயிற்சி
26-Jan-2026
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்புத் துறை நிலையத்தில் பிப்.,9 முதல் தனியார் துறை காவலாளிகளுக்கு இலவச அடிப்படை தீயணைப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தீயணைப்பு- மீட்புப்பணி மாவட்ட அலுவலர் ஏழுமலை கூறியதாவது: தனியார் பாதுகாப்பு காவலாளிகளுக்கு இலவசமாக தீயணைப்பு அடிப்படை பயிற்சி பிப்.9 ல் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. நிலைய அலுவலர்கள் தினமும் காலை 10:30 முதல் மதியம் 1:00 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். பணிபுரியும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டால் தீ பாதுகாப்பு உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது, பொதுமக்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தை அணுகலாம் என்றார்.
26-Jan-2026