மேலும் செய்திகள்
திருத்தேர்வளையில் நாளை மக்கள் தொடர்பு முகாம்
13-Nov-2024
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அத்தானுாரில் நவ.30ல் சட்ட விழிப்புணர்வு முகாம் நடப்பதால்சுற்றுப்புற கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவாடானை நீதிமன்ற வட்ட சட்டப் பணிகள் குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர். திருவாடானை நீதிமன்றத்தில் இயங்கி வரும் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட அத்தானுாரில் நவ.30 மதியம் 3:00 மணிக்கு திருவாடானை நீதிமன்ற நீதிபதி தலைமையில் பொதுமக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் சட்டம் சார்ந்த பிரச்னைகளுக்கும், தங்கள் பகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத அடிப்படை தேவைகளான குடிநீர், ரோடு, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மனுக்கள் அளித்து இந்த முகாமில் பயனடையுமாறு திருவாடானை வட்ட சட்டப் பணி குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13-Nov-2024