இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் தியாகி தர்மக்கண் அமிர்தம் பி.எட்., கல்லுாரியில் இதயம் மற்றும் கண் பரிசோதனை இலவச மருத்துவ முகாம் நடந்தது. திருநெல்வேலி காவேரி மருத்துவமனை, திருநெல்வேலி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்திய மருத்துவ முகாமிற்கு பி.எட்., கல்லுாரி செயலர் அமேஷ் ஜெபராஜ் தலைமை வகித்தார். முதல்வர் குருசாமி வரவேற்றார். மேலாண்மை குழு உறுப்பினர் சவுந்தரராஜன் முகாமை துவக்கி வைத்தார். கல்லுாரி குழு உறுப்பினர்கள் ஜெயவீர பாண்டியன், ஆசிரியர் மனுவேல், சுசீலா, ஜெயசீலா, ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் உயர் ரத்த அழுத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ., கண் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், ஜெயபிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.