உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புதிய பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

புதிய பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில், 550 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாலம் கட்டுமானம் முடிந்துள்ளது. அடுத்தடுத்து சோதனை ஓட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்று ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, 15 காலி ரயில் சரக்கு பெட்டிகள், ஒரு கார்டு பெட்டியுடன் ரயில் இன்ஜின் 90 கி.மீ., வேகத்தில் புறப்பட்டது. புதிய பாலத்தில் 10 கி.மீ., வேகத்தில் கடந்து, பாம்பன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. இங்கிருந்து ராமேஸ்வரம் வரை மீண்டும், 90 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது.இந்த சோதனை வெற்றிகரமாக இருந்தது எனவும், ஓரிரு நாட்களுக்கு பின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்ததும், பாலம் திறப்பு விழா தேதி அறிவிக்கப்படும் என, ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி