உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் பகுதியில் அடிக்கடி மின்தடை

முதுகுளத்துார் பகுதியில் அடிக்கடி மின்தடை

முதுகுளத்துார்: முதுகுளத்துார் துணை மின்நிலையத்தில் இருந்து முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட வீடுகள், சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் சப்ளை செய்யப்படுகிறது. முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அரசு அலுவலகங்களில் மக்கள் சிரமப்படுகின்றனர். கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. அடிக்கடி ஏற்படும் மின்தடையால் ஒரு சில வீடுகளில் எலெக்ட்ரிக் பொருட்களும் பழுதடைகிறது.தற்போது விவசாயத்திற்கு பயிர் காப்பீடு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருவதால் மின்தடையால் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே முதுகுளத்துார் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை