உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற நண்பர்கள்

தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற நண்பர்கள்

பரமக்குடி; பரமக்குடியில் கட்டட தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற நண்பர்களை போலீசார் தேடுகின்றனர். மதுரையை சேர்ந்தவர் முத்துராமலிங்கம், 30; கட்டட தொழிலாளி. ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் நகரில் மனைவி ரஞ்சிதா, 25, இரு பெண் குழந்தைகளுடன் வசித்தார். பரமக்குடியில் வேலை பார்த்ததால், அங்கு மஞ்சள்பட்டணத்தில் உள்ள நண்பர் தினேஷ்பாண்டி வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, முத்துராமலிங்கம், நண்பர்கள் கார்த்திக், 34, கவியரசு, 25, ஒன்றாக மது அருந்தினர். அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், முத்துராமலிங்கத்தின் தலையில் நண்பர்கள் இருவரும் கல்லால் தாக்கிவிட்டு தப்பினர். இதில், முத்துராமலிங்கம் உயிரிழந்தார். எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை