உள்ளூர் செய்திகள்

பவுர்ணமி பூஜை

ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் அருகே ராணி மங்கம்மாள் சாலை செல்லும் வழியில் வண்ணாங்குண்டு கிராமத்தில் குச்சிலியமடம் மகாமுனீஸ்வரர் கோயில் உள்ளது. பழமையான ஆலமரத்தின் கீழ் உள்ள நாகநாத பெருமானுக்கு புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் சிவ நாம அர்ச்சனை செய்து பிரார்த்தனை மற்றும் கூட்டு வழிபாடு செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குச்சிலிய மடத்து மகா முனீஸ்வரர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ