உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உப்பூரில் இரு தேவியருடன் விநாயகர் திருக்கல்யாணம்

உப்பூரில் இரு தேவியருடன் விநாயகர் திருக்கல்யாணம்

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் இரு தேவியருடன் விநாயகர் திருக்கல்யாணம் நடந்தது. ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் வெயில் உகந்த விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமையப் பெற்றுள்ளதால் இந்த பெயர் வந்தது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடக்கிறது. ஆக.,18ல் சதுர்த்தி விழா துவங்கியது. தினமும் மாலையில் வெள்ளி மூஷிகம், கேடகம், சிம்மம், மயில், யானை, ரிஷபம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. விழாவின் 8ம் நாளில் முக்கிய நிகழ்வான விநாயகர் திருக்கல்யாணம் நடைபெற்றது. சித்தி, புத்தி ஆகிய இரு தேவியருடன் நேற்று மாலை 4:45 மணிக்கு விநாயகருக்கு திருக்கல்யாணம் நடந்தது. தமிழகத்தில் இரு தேவியருடன் இந்த விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் நடைபெறுவதால் உள்ளூர், வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் பெண்களுக்கு தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் திருமண எழுதினர். தொடர்ந்து, குதிரை வாகனத்தில் இரு தேவியருடன் விநாயகர் வீதி உலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை