உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மோர்ப்பண்ணை கடற்கரையில் குப்பையால் சுகாதாரக்கேடு

மோர்ப்பண்ணை கடற்கரையில் குப்பையால் சுகாதாரக்கேடு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை கிராமத்தில், கடற்கரையோரம் குப்பையை கொட்டுவதால் துர்நாற்றத்தினால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.மோர்ப்பண்ணை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடற்கரை, மீனவ கிராமமான இப்பகுதியில், மீன்பிடித் தொழிலை பிரதான தொழிலாக அப்பகுதியினர் கொண்டுள்ளனர்.இந்த நிலையில், குடியிருப்பு பகுதிகளில் வெளிவரும் குப்பை கழிவுகளை கடற்கரை ஓரத்தில் கொட்டப்பட்டு வருவதால், கடற்கரைப் பகுதி குப்பை குவியலாக உள்ளது.இதனால் ஏற்படும் கடும் துர்நாற்றத்தால் கடலுக்கு செல்லும் மீனவர்களும், அப்பகுதி குடியிருப்பு வாசிகளும் சிரமப்படுகின்றனர்.எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் கடற்கரையோரம் கொட்டப்படும் குப்பையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி