உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத சூரை மீன்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத சூரை மீன்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர் வலையில் ராட்சத சூரை மீன் சிக்கியது. ஆக., 25ல் பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று மாலை கரை திரும்பினர். இதில் ஒரு நாட்டுப்படகில் 5 அடி நீளம், 105 கிலோவில் ராட்சத சூரை மீன் சிக்கியது. ஆழ்கடலில் வசிக்கும் இந்த சூரை மீனுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம். இந்த மீனை பெரும் சிரமத்துடன் கரைக்கு கொண்டு வந்தனர். கிலோ ரூ.150 வீதம் ரூ.15,750 க்கு கேரளா மீன் வியாபாரி இதை வாங்கிச் சென்றார். இதனால் மீனவர் மகிழ்ச்சி அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி