உள்ளூர் செய்திகள்

கிடாய் வெட்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்தமங்கலம் சக்தி மாரியம்மன் கோயில், முளைப்பாரி விழாவை முன்னிட்டு கிடாய் வெட்டு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு முளைப்பாரி மற்றும் தீச்சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினார். மூலவர் அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் ஆடுகள் பலியிடப்பட்டு அசைவ விருந்து அன்னதானம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி