உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பால் இறப்பு

அரசு பஸ் கண்டக்டர் மாரடைப்பால் இறப்பு

ராமநாதபுரம்: கரூரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பஸ்சில் பணிபுரிந்த கண்டக்டர் ராஜேந்திரன் 56, மாரடைப்பால் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி போஸ்டல் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக இருந்த இவர் நேற்று கரூரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பஸ்சில் பணிபுரிந்தார். மதியம் 2:05 மணிக்கு பஸ் பார்த்திபனுார் வந்துள்ளது. அப்போது இருக்கையில் ராஜேந்திரன் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்த டிரைவர் செல்லமுத்து அவரை எழுப்ப முயன்றார். பேச்சு மூச்சின்றி இருந்த ராஜேந்திரனை உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர். பார்த்திபனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை