அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அரசு அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராமநாதபுரம் நகர் மற்றும் கலெக்டர் அலுவலக கிளைகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதல்வர் மவுனம் கலைக்க வேண்டும். பழைய பென்சன் திட்டம்அமல்படுத்துவது உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என வலியுறுத்தி 20 க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இறுதியாக கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் விஜயராமலிங்கம், மாநில செயலாளர் நீதிராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் பாரதிராஜா, உமேஷ்குமார், மாரிமுத்து, விஜயகாந்த், மெய்யசக்தி, சண்முகராஜ், ராஜன், சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.