உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் சேதம்: நோயாளிகள் பாதிப்பு

அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் சேதம்: நோயாளிகள் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். புதிய மருத்துவமனை கட்டடம் கட்ட ரூ 1.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த மாதம் கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மருத்துவமனை சுற்றுச்சுவர் சீரமைப்பு செய்யப்படாததால் பல இடங்களில் இடிந்து விழுந்து பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதனால் மருத்துவமனை வளாகம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறி வருகின்றன. மேலும், மருத்துவமனை வளாகம் முறையான பராமரிப்பு இல்லாததால் புதர்கள் சூழ்ந்து, விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவமனை வரும் நோயாளிகளும், ஊழியர்களும் கடும் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுற்றுச்சுவரை சீரமைப்பதுடன், மருத்துவமனை வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ