உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உத்தரகோசமங்கையில் அரசு ஐ.டி.ஐ., துவக்கம்

உத்தரகோசமங்கையில் அரசு ஐ.டி.ஐ., துவக்கம்

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் நடப்பாண்டில் இருந்து புதிய அரசு ஐ.டி.ஐ.,துவக்கப்பட்டது.உத்தரகோசமங்கை சமுதாய கூடத்தில் தற்காலிகமாக அரசு ஐ.டி.ஐ., இயங்கி வருகிறது. மாணவர்கள் சேர்க்கைக்கான தொழிற்பிரிவுகள் உள்ளன.மேம்படுத்தப்பட்ட சி.என்.சி., மெக்கானிக் டெக்னிசியன், மரைன் இன்ஜின் பில்டர், வயர்மேன், டீசல் மெக்கானிக்உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.இவற்றில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இருபாலர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. மாதாந்திர கல்வி உதவித்தொகை ரூ.750 மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுகிறது.பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -5, டி.சி., 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி மற்றும் வருமான சான்றிதழ்,ஆதார் அடையாள அட்டை, வங்கி பாஸ்புக் உள்ளிட்டவைகளை கொடுத்து புதிதாக விண்ணப்பிக்கலாம் என ஐ.டி.ஐ., முதல்வர் தெரிவித்தார்.உத்தரகோசமங்கையில் புதியதாக ஐ.டி.ஐ.,க்கு கட்டுமான பணிக்கான நிலம் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி