அரசு திட்டப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
பரமக்குடி; பரமக்குடி நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் ரூ.4.17 கோடியில் நடந்து வரும் திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டார். பரமக்குடி நகராட்சியில் ரூ.75 லட்சத்தில் நகர்ப்புற சுகாதார மைய கட்டடம் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. பொதுப்பணித் துறையின் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பில் வணிகவரி துறைக்கான அலுவலக கட்டடப் பணிகள் துவங்கி உள்ளது. இதே போல் நென்மேனி ஊராட்சி மரைக்காயர்பட்டணம் மற்றும் உரப்புளி செல்லும் வழியில் ரூ.2.4 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்படுகிறது. இவற்றை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.