உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளியில் பட்டமளிப்பு

பள்ளியில் பட்டமளிப்பு

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ம் ஆண்டு மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.தாளாளர் கோகிலா தலைமை வகித்தார்.நிர்வாக ஆலோசகர் ஜேக்கப் முன்னிலை வகித்தார். முதல்வர் பிரீத்தா வரவேற்றார்.ரெகுநாதபுரம் வெற்றி பல் மருத்துவமனை டாக்டர் மேனகா, முத்துப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி கணித ஆசிரியர் காளிராஜ் உட்பட ஏராளமான மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !