உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு

மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு

கடலாடி: கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பயிற்சி மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள் தாஸ் தலைமை வகித்தார். வட்டார வள பயிற்றுநர்கள் பாண்டியம்மாள், விஜயலட்சுமி ஆகியோர் மாணவிகளுக்கு மாதவிடாய் குறித்த தவறான கருத்துக்களை போக்கும் விதமாக மனநலம் சார்ந்த விழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் நாகராஜன் வரவேற்றார். என்.எஸ்.எஸ்., அலுவலர் சொக்கர் நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை