உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் கடற்கரையில் பாலிதீன் குப்பை குவியல்

பாம்பன் கடற்கரையில் பாலிதீன் குப்பை குவியல்

ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் பாலிதீன் கழிவு குப்பை குவிந்து கிடப்பதால் மீன்கள் உள்ளிட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது. பாம்பன் கடல் சார்ந்த மன்னார் வளைகுடா கடலில் ஏராளமான மீன்கள் வசிக்கிறது. இதனை பாதுகாக்க மத்திய அரசு மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் மூலம் பல கோடி ரூபாய் செலவிட்டு வருகிறது. இந்நிலையில் பாம்பன் தெற்கு கடற்கரையில் உள்ள மீன் கம்பெனிகள், வணிக கடைகள், வீடுகளில் இருந்து வெளியேறும் பாலிதீன் கழிவுகளை கடற்கரையில் கொட்டி குவித்துள்ளனர். மேலும் ஊராட்சி வாறுகாலில் வரும் கழிவுநீர் நேரடியாக கடலில் கலப்பதால், கடல் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மீன்கள் சுவாசப் பிரச்னையால் உயிரிழக்கிறது. மேலும் பாலிதீன் கழிவுகள் காற்றின் வேகத்தில் கடலில் விழுவதால் இதனை உட்கொள்ளும் மீன்கள் அழியும் அபாயம் உள்ளது. மீன் வளங்களை பாதுகாக்க மத்திய அரசு முன்வரும் நிலையில் சுகாதார கேடு, பாலிதீன் கழிவுகளால் மீன்கள் உயிரிழப்பதை தடுக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி