உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ெஹல்மட் அணிந்து  விழிப்புணர்வு  ஊர்வலம்

ெஹல்மட் அணிந்து  விழிப்புணர்வு  ஊர்வலம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போக்குவரத்துத் துறை, காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.2025 ம் ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு மாத விழா ஜன.,31 வரை நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார். எஸ்.பி., சந்தீஷ் முன்னிலை வகித்து ஊர்வலத்தில் பங்கேற்றார். போலீசார் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ெஹல்மட்' அணிந்து டூவீலரில் ராமேஸ்வரம் ரோடு, மதுரை ரோடு, கேணிக்கரை ரோடு ஆகிய இடங்களில் ஊர்வலமாக சென்று டி-பிளாக் அம்மா பூங்கா அருகே நிறைவு செய்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் ேஷக் முகமது வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில் குமார், பத்மபிரியா, ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர், புதிய வாகன விற்பனையாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி