உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உத்தரகோசமங்கையில் மூலிகை கஞ்சி வழங்கல்

உத்தரகோசமங்கையில் மூலிகை கஞ்சி வழங்கல்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் ராஜகோபுரம் அருகே ஓராண்டிற்கும் மேலாக மூலிகை கஞ்சி வழங்கப்படுகிறது. உத்தரகோசமங்கை அருகே இனிசேரி கிராமத்தில் சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் ஆசிரமம் உள்ளது. அங்கிருந்து தயார் செய்யப்பட்ட மூலிகை கஞ்சியினை தினந்தோறும் காலை 7:00 முதல் 9:00 மணிக்குள் ராஜகோபுரத்தின் அருகே பக்தர்களுக்கும் சிவனடியார்களுக்கும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.சூட்டுக்கோல் மாயாண்டி சித்தர் ஆசிரம நிர்வாகி கர்ணன் கூறியதாவது: சீரகம், வெந்தயம், மிளகு, இஞ்சி, கருவேப்பிலை, பச்சரிசி ஆகியவற்றின் மூலமாக தயாரிக்கப்பட்ட மூலிகை கஞ்சி சத்து வாய்ந்ததாகும். காலையில் சிவ நாமத்தை கூறி சங்கு சத்தம் ஒலித்து பின்னர் மூலிகை கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி