உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டோல்கேட்டை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

டோல்கேட்டை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: மதுரை வழக்கறிஞர் முகமது ரஸ்வி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை போகலுாரில் சட்டவிரோதமாக டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்ற தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவர், ராமநாதபுரம் கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு: நெடுஞ்சாலைகளை பராமரிப்பதற்காக சட்டப்படி டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அது அரசின் கொள்கை முடிவு தொடர்புடையது. மனுதாரர் கோரும் நிவாரணத்தை பரிசீலிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ