ராமேஸ்வரத்தில் புதிய நீதிமன்றம் உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் புதிய நீதிமன்ற கட்டடத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சி.சரவணன் ஆய்வு செய்தார்.ராமேஸ்வரத்தில் ரூ.7.5 கோடியில் புதிய நீதிமன்றம், நீதிபதிகள் குடியிருப்பு, விருந்தினர் மாளிகை ஆகியவை அமைத்து விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த புதிய கட்டடம் மற்றும் வளாகத்தை நேற்று உயர்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் ஆய்வு செய்து நீதிபதிகள் மற்றும் ராமேஸ்வரம் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இதில் ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி மெகபூப் அலிகான், ராமேஸ்வரம் நீதிபதி இளையராஜா, ராமநாதபுரம் கட்டுமானபிரிவு செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், ராமேஸ்வரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் மயில்சாமி உடனிருந்தனர்.