நீதிமன்ற வளாகத்தில் நுாலகம் திறப்பு உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்பு
பரமக்குடி: - பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வக்கீல்கள் சங்க நுாலகத்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் திறந்து வைத்தனர்.பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பழமை மாறாத நீதிமன்றம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வக்கீல்கள் சங்க நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. நுாலகத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரவணன், நிர்மல் குமார் திறந்து வைத்து, அங்குள்ள புத்தகத்தை எடுத்து வாசித்தனர். சென்னை உயர் நீதிமன்ற மூத்த வக்கீல் சதீஷ் பராசரன் நுாலக கல்வெட்டை திறந்தார்.பின்னர் மூத்த வக்கீல் பராசரன் பட திறப்பு விழா நடந்தது.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மெகபூப் அலிகான் வாழ்த்தி பேசினார். பரமக்குடி வக்கீல் சங்க தலைவர் பூமிநாதன் வரவேற்றார். முன்னதாக நீதிபதிகளுக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. வக்கீல்கள் பலர் பங்கேற்றனர். வக்கீல் சங்கச் செயலாளர் யுவராஜ் நன்றி கூறினார்.