உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அதிக மீன்வரத்து: ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி

அதிக மீன்வரத்து: ராமேஸ்வரம் மீனவர்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 10 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்க சென்ற போது அதிக மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி அடைந்தனர். மீன்கள் விலை வீழ்ச்சியால் செப்., 23 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் ஓய்வு எடுத்தனர். இந்நிலையில் நவராத்திரி விழா முடிந்ததும், அக்.,4ல் ராமேஸ்வரத்தில் இருந்து 240 படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 10 நாட்களுக்குப் பின் இந்திய, இலங்கை எல்லையில் மீனவர்கள் மீன் பிடித்து நேற்றுமுன்தினம் ராமேஸ்வரம் கரை திரும்பினார்கள் இதில் பெரும்பாலான படகில் எதிர்பார்த்த மீன் வரத்து சிக்கியதால், நஷ்டம் இன்றி வருவாய் கிடைத்தது. மேலும் குறைவான எண்ணிக்கையில் படகில் மீன்பிடிக்க சென்றதால் எதிர்பார்த்த மீன்கள் சிக்கியதாகவும், இலங்கை கடற்படை கெடுபிடியும் இல்லை என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி